இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அல்லது இந்திய துணைத் தூதரகங்கள் அல்லது இலங்கையிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக வெளியான தகவல்களை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், விசா பிரிவு ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியாததால், பெரும்பாலான இலங்கை பிரஜைகள் விசாவிற்கு சமூகமளிக்காததால் செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டன.
செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையர்களின் பயணத்தை இலகுபடுத்துவதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகராலயம், இந்தியர்கள் இலங்கையில் இருப்பதைப் போன்று இலங்கையர்களும் இந்தியாவிலும் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
High Commission categorically denies that it or the Indian Consulates General or the Assistant High Commission of #India in #SriLanka have stopped issuing visas.
In the past few days, there were operational difficulties due to the inability of our Visa Wing staff,(1/2)
— India in Sri Lanka (@IndiainSL) May 13, 2022