நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று (04) இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்ச்சங்கங்கள், பொது அமைப்புக்கள் கூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் 6 ஆம் திகதி அனைத்து கடைகள் மூடப்படும். பேருந்துகள் சேவையில் ஈடுபடாது இருக்கவும், முற்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபடாமலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பல்கலைக்கழகம், ஆசிரியர் சங்கங்கள் தமது கடமையில் இருந்து விலகியிருக்கவும் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை 6 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1