26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

நாளைய வேலை நிறுத்தத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

நாளைய வேலை நிறுத்த போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்று நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்து, நாளையதினம் (28.04.2022) பணிப்பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனை அனைவரும் ஏற்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதைவிட ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் 06.05.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பொதுக் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த இரண்டு நாட்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது. அதிபர்கள் கல்வித் திணைக்களத்திற்கும், ஆசியர்கள் அதிபர்களுக்கும் தமது விடுமுறையை அறிவிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இனி வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment