நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலையேற்றத்தை கண்டித்தும் மஸ்கெலிய நகரில் நேற்று (21) காலை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வாகன சாரதிகள் மற்றும் நகர வர்த்தகர்கள் ஆகியோர் அடங்கிய சுமார் மூவாயிரம்திற்கும் மேலான மக்கள் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் மஸ்கெலிய தனியார் வாகன தரிப்பிடத்தில் இருந்து ஊர்வலமாக எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது ஒப்பறி வைத்தும் உருவ பொம்மையை எரித்தும் பிரதான பாதையில்
டயர்களை எரித்தும் பல்வேறு வடிவங்களில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தினால் அட்டன், நல்லதண்ணி போன்ற இடங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-ஞானராஜ்-