ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் பாடசாலைகளிற்கு மாணவர்களை அழைப்பது குறித்து பாடசாலை அதிபர்கள் தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்கள் ஏப்ரல் 4 மற்றும் 8 ஆம் திகதிகளுக்கு இடையில் தவணைப்பரீட்சை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மாணவர்களை அழைப்பது குறித்து முடிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பகால பாடசாலை விடுமுறைகளை பிரகடனப்படுத்துமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று முன்னதாக பரிந்துரைத்திருந்தது.
நீண்ட மின்வெட்டு காரணமாக அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.