What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
நேற்று (30) பண்டாரவளை விளையாட்டு மைதான திறப்பு விழாவில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்ளவிருந்த போதிலும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் விழாவிற்கு வரவில்லை.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்படவிருந்த புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை பண்டாரவளை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க திறந்து வைத்தார்.
பண்டாரவளை நகருக்கு அருகில் பண்டாரவளை – பதுளை வீதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வந்த பெருந்தொகையான மக்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளை – பண்டாரவளை வீதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாற்று வழியில் போக்குவரத்தை பொலிசார் சீர் செய்தனர்.
பொலிசார் பெரு முயற்சியின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி வீதியை திறந்தனர்.