யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் நாளை மறுநாள் (28) திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ் மாநகரசபைக்கு சொந்தமான நிலத்தில், இந்திய நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 300 கோடி ரூபாவில் இது அமைக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டு மையத்தை யார் நிர்வகிப்பது என்ற இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை மறுநாள் திறப்பு விழா நடைபெறவுள்ளது. மதியம் 12 மணிக்கு திறப்பு விழா இடம்பெறும்.
அன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொழும்பு வரவுள்ளார். கொழும்பிலிருந்து காணொளி வழியாக அவர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு ஆளுனர், யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்டவர்கள் பண்பாட்டு மையத்தில் நேரடி நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
1