25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
உலகம்

மனைவியை கிண்டல் செய்ததை தாங்க முடியாததால் அடித்தேன்; வன்முறை ஆபத்தானது; மன்னித்துக் கொள்ளுங்கள்: வில் ஸ்மித்!

நடிகர் வில் ஸ்மித் நேற்று இடம்பெற்ற ஒஸ்கார் விருது விழாவில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் கிறிஸ் ரொக்கை அறைந்தது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்க  மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

விழாவில் தாம் நடந்துகொண்ட விதம் சரியல்ல என்றும் அதற்கு எந்தவிதமான காரணத்தையும் அளிக்கமுடியாது என்றும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

”என்னைப் பற்றிக் கிண்டலாகப் பேசுவது என் வேலையில் வழக்கமானது… ஆனால் என் மனைவி ஜேடாவின் உடல்நிலையைப் பற்றிக் கிண்டல் செய்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையான முறையில் நடந்துகொண்டது தவறு என்றும் தாம் செய்ததை எண்ணி வெட்கமடைவதாகவும் குறிப்பிட்ட ஸ்மித். அதுகுறித்து அவர் ரொக்கிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அன்பு, பரிவு போன்றவை நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விழா ஏற்பாட்டாளர்கள், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள், (செரினா, வீனஸ்) வில்லியம் குடும்பத்தினர், அவரது King Richard படத்தின் குழுவினர் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

‘என் வளர்ச்சி இன்னும் முடிவுபெறவில்லை’ என குறிப்பிட்டு நடிகர் ஸ்மித் தமது இணைய மன்னிப்புரையை முடித்துக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

ஹமாஸ்ஸினால் விடுவிக்கப்பட்ட 3 பணயக்கைதிகள் இஸ்ரேலில் இணைவு

east tamil

47வது அமெரிக்க ஜனாதிபதியாக பதியேற்கும் டொனால்ட் ட்ரம்ப்

east tamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment