நாட்டில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மக்கள் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள முடியாதநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
துனியார் வணிக நிலையங்களில் சமையில் எரிவாயு இல்லாத நிலையில் உணவகங்கள் பல மூடும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் உணவு சமைப்பதில் பெற்றோர்கள் பல சிரமங்களுக்கு எதிர்கொண்டு வருகின்றார்கள்
இன்னிலையில் தனியார் வணிக நிலையங்களில் சமையல் எரிவாயு பதுக்கப்பட்டு அதிக விலையில் விற்கப்பட்டுள்ள சம்பவமும் கண்டறியப்பட்டுள்ளது.
இன்னிலையில் தனியார் வணிக நிலையங்களுக்கு சமையல் எரிவாயுவினை வழங்காத நிலையில் முல்லதை;தீவு பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இன்று 16.03.2022 காலை சமையல் எரிவாயு விநியோகத்தர்கள் வாகனத்தில் வந்து மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்
ஒருசில கடைகளுக்கு மாத்திரம் அறிவிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை அறித்த பல மக்கள் நீண்ட வரிசையில் சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள காத்திருந்தார்கள்.
குடும்ப அட்டையினை காண்பித்து ஒரு குடும்பத்திற்கு ஒரு சமையல் எரிவாயு என்ற வீதத்தில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
500 வரையான சமையல் எரிவாயு சிலிண்டர்களே மக்களுக்கு வழங்கப்பட்ட போதும் பலர் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளமுடியாது திரும்பி சென்றுள்ளார்கள்.
இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசலுக்காக உளவியந்திரங்கள் உட்பட நூற்றுக்கனக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.
=கே .குமணன்-