26.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

மின்வெட்டு எதிரொலி: குளிர்சாதன பெட்டிக்குள் வைத்த உணவுகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருங்கள்!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு காரணமாக உறைந்த உணவின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்க தலைவர் உபுல் ரோஹன, துர்நாற்றம், நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சி உள்ளிட்ட உறைந்த உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது வாங்குவதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இறைச்சி மற்றும் பாலைத் விற்பனை செய்த 387 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

7 மணி நேரம் மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகள் செயல்படாததால் உணவுப் பொருட்கள் மோசமாகி வருவதாக அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் பொறுப்புடன் இருக்குமாறு உபுல் ரோஹன கேட்டுக்கொண்டார்.

கடைகளில் உறைந்த உணவுகளை வாங்கும் போது நுகர்வோர் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினர் – பிரதமர் சந்திப்பு

east tamil

பதுளையில் அதிகரித்த நாய்க்கடி விவகாரம்: செல்லப்பிராணிகள் கடிப்பதே அதிகம்!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச் சூடு: ஐவர் இலக்கு – ஒருவர் உயிரிழப்பு!

east tamil

யாழில் மதுபானச்சாலைக்குள் ரௌடிகள் வெறியாட்டம்!

Pagetamil

பசிலின் முறைகேடுகள் பற்றி சிஐடியில் முறையிட்ட வீரவன்ச

Pagetamil

Leave a Comment