Pagetamil
இலங்கை

பஸ் கட்டணங்கள் 30% அதிகரிக்கும்!

CEYPETCO நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமைக்கு இணங்க டீசல் சலுகையை கோரி போக்குவரத்து அமைச்சிடம் இன்று கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு சலுகை வழங்கப்படாவிடின் விலை திருத்தத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பயணிகளின் கோரிக்கை காரணமாக சேவை நிறுத்தப்படவில்லையென தெரிவித்தார்.

எனவே, அதிகரித்து வரும் எரிபொருள் விலையை எதிர்கொள்ளும் வகையில் விலை திருத்தம் அவசியம் என அவர் கருத்து தெரிவித்தார்.

விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் போக்குவரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 முதல் 30 வரை அதிகரிக்கப்படும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விலைவாசி உயர்வைத் தவிர்க்க வேண்டுமானால், போக்குவரத்துத் துறைக்கு டீசல் சலுகையை அரசு வழங்க வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

தேர்தல் செலவு அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கான விசாரணை ஆரம்பம்

east tamil

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

Leave a Comment