27.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரும் தீர்மானம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பங்குனி மாதத்திற்கான அமர்வு நேற்று (10) தவிசாளர் தவக்குமாரின் தலைமையில் பிரதேச சபையின் புதிய மண்டபத்தில் காலை 10:00மணிக்கு ஆரம்பமானது இதில் உறுப்பினர்களான ஆறுமுகம் ஜோன்சன் மற்றும் சிவபாதம் குகனேசன் ஆகியோரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் விவாதம் சபையில் முன்வைக்கப்பட்டது.

இதில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக தொடர்ந்து சபையில் ஆறுமுகம் ஜோன்சன் உரையாற்றுகையில், கடந்த 1978ம் ஆண்டு இலங்கை நாட்டில் அறிமுகமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சித்திரவதைக்குட்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து தமது இளமைக் காலத்தில் பல துன்பங்களை சந்தித்து வந்தனர். குறிப்பாக 2019ம் ஆண்டு நடைபெற்ற ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் கழிந்தும் இன்னமும் அதற்குரிய குற்றவாளிகள் இனங்கானப்படவில்லை. பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பல முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களிடம் உள்ளது. முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எனக்கும் எனது ஆதரவாளர்கள் பல இளைஞர்களுக்கும் குறிப்பாக கனகராசா கவியரசன் என்கிற அரசியல் செயற்பாட்டாளருக்கும் இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது.

சிங்கள புத்திஜீவிகள் பலரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை இலங்கையில் இருந்து முற்றாக இல்லாமல் செய்யவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறார்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தும் ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் இந்த நாட்டிற்கு என கேள்வி எழுப்புகிறேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும்

Pagetamil

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment