‘வட கிழக்கு சமர்’ என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு சைக்கிள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி நிகழ்வு இன்று (27) மட்டக்களப்பு திருமலை வீதி ஊறணியில் நடைபெற்றது.
முன்னாள் சைக்கிள் ஓட்ட வீரர் அமரர் செல்வராஜாவின் ஞாபகார்த்தமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜ.பிறேம்நாத் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மாநகரமுதல்வர் ரி.சரவணபவன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரஸ்ரீ, மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி வி.ஈஸ்பரன், கல்கி அறக்கட்டளை ஸ்த்தாபகர் என்.நர்மதன், மட்டக்களப்பு மாவட்ட சமூகபற்றாளர் வி.லவக்குமார், சிறப்பு அதிதியாக நடேசு உதயகுமார் (சுவீஸ்) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (27) காலை திருமலை வீதி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் ஆரம்பமான சைக்கிள் ஓட்டமானது கொழும்பு திருமலை வீதி வழியாக கல்லடி மணிக் கூட்டு கோபுர வளைவு வீதி ஊடாக வாழைச்சேனை சுற்று வளைவினை அடைந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இடத்தினை சென்றடைந்தது.இவ் சைக்கிள் ஓட்டமானது 102 கிலோ மீற்றர் தூரம் ஓட்டமானதாகும்.
இதில் 1ஆம் இடத்தினை பி.சதீஸ்காந், 2ஆம் இடத்தினை பாலரசன் (முல்லைத்தீவு), 3 ஆம் இடத்தினை ரி.நிரல்சன்,4 ஆம் இடத்தினை ஜ.பிரேம்நாத், 5ஆம் இடத்தினை வி.பார்த்தீபன் ஆகியோர்கள் வெற்றி பெற்றனர்.
3 வருடங்கள் கடந்த நிலையில் மாவட்டத்தில் இப் போட்டி நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்விற்கான அனுசரணையை எஸ்.வைகுந்தன் வழங்கியிருந்தார்.
-ருத்திரன்-