யாழ்ப்பாணத்தில் 818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி நகருக்கு அண்மையில், பருத்தித்துறை வீதியில் வைத்து நேற்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர்.
காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை 50 இலட்சம் ரூபாவிற்கு நபரொருவரிற்கு விற்பனை செய்ய வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நெல்லியடி பொலிசாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1