26.2 C
Jaffna
December 14, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டதால் நாடாளுமன்றத்தில் மீனவர் பிரச்சனையை விவாதிக்காமல் தவிர்த்தோம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை சமர்ப்பிக்கவிருந்த போதும், இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதனை தவிர்த்துக் கொண்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றய தினம் 09-02-2022 புதன்கிழமை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய நான் முன்மொழிந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்து விவாதத்தை ஆரம்பிக்கும் வகையில் எமது தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் குறித்த பிரேரணை இன்று பி.ப 4.50 மணியளவில் விவாதத்திற்கு கொண்டுவரப்படும் வகையில் நாடாளுமன்றில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக எமது மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தடுக்காது, அவர்களது வலைகள் அழிக்கப்படுவதனையும், படகுகள் சேதமாக்கப்படுவதனையும், மீனவர்கள் தாக்கப்படுவதனையும், கொல்லப்படுவதனையும் இலங்கை கடற்படையும் சிறீலங்கா அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றமை தொடர்பில் குறித்த விவாதத்தினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

இந் நிலையில், இன்று நண்பகல் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, எம்மால் முன்னெடுக்கப்படவிருந்த விவாதம் தொடர்பில் கலந்துரையாடினார். அதன்போது நாம், எமது வட பகுதி மீனவர்களது கடற்தொழிலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை கடற்படை நடவடிக்கை எடுக்காது எமது வடபகுதி மீனவர்களுக்கும் எல்லைதாண்டிவரும் மீனவர்களுக்கும் இடையில் மோதலை தீவிரப்படுத்தி பகைமையை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் நாம் குறித்த விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்பதனை தெரிவித்தோம்.

அதன்போது, தூதரக அதிகாரி, இப்பிரச்சினை தொடர்பில் தமது தரப்பிலிருந்தும் தாம் அக்கறை செலுத்துவதாகவும், மேற்படி மீனவர் பிரச்சினையானது யாழ்ப்பாணத்திலும், தமிழகத்திலும் ஓர் நெருக்கடி மிகுந்த சிக்கல் நிலைக்கு வந்துள்ளதாகவும், அந்த நெருக்கடி நிலையை தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும், அந்த வகையில் இப்பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்குத் தாம் முடிவெடுத்துள்ளதாகவும், தாம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக குறித்த விடயத்தினை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மீனவர்களது பிரச்சினையை தீர்ப்பதற்கான அவர்களது முயற்சிக்கு ஒத்துழைக்கும் வகையில் குறித்த பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுப்பதனைத் தவிர்த்துக் கொண்டுள்ளோம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

UPDATE: காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்களும் மீட்பு!

Pagetamil

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஒரே பார்வையில் இலங்கைப் பாதிப்பு விபரம்!

Pagetamil

Leave a Comment