கிளிநொச்சி மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கம் கிளிநொச்சி றொட்டரிக் கழகத்தின்
அனுசரணையில் மாவட்டத்தில் வசிக்கின்ற யுவதிகளின் விளையாட்டின் ஊடான
திறன் விருத்தி. உடல் உள ஆரோக்கியமான சமூகமாக கட்டியெழுப்புதல் முகமாக
வருடந்தோறும் நடாதப்படுகின்ற வலைப்பந்தாட்டப் போட்டிகள் இவ்வருடமும்
நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரும் 27,28 திகதிகளில் கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்தின்
உள்ளகரங்கில் பகலிரவு போட்டியாக நடைப்பெற ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே பங்குபற்ற விரும்புகின்றவர்கள் தங்களது பாடசாலை அல்லது கழகம் சார்ந்து திறந்த வயது பிரிவு அணியொன்றை தெரிவு செய்து வரும் 22 திகதிக்கு முன் எஸ்.பெர்னாட்டோ, ( ஆசிரியர்) விஞ்ஞானக் கல்வி நிலையம், கரடி போக்கு எனும் முகவரிக்கோ அல்லது 0770257135 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறோ கேட்டுக்கொள்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.