இலங்கையில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு சிம்பாவே அணியின் தலைவராக கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாகும். கடந்த செப்டம்பரில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிய பின்னர், சிம்பாவே ஆடும் 3 போட்டிகளை கொண்ட தொடராகும்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட்-செப்டம்பரில் அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் சுற்றுப்பயணத்திற்கான அணிக்கு தலைமை வகித்த பின்னர், சிம்பாவேயை மீண்டும் ஒருமுறை வழிநடத்தும் பொறுப்பு எர்வினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அணியில் முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரர் டகுட்ஸ்வானாஷே கைடானோ மற்றும் விக்கெட் கீப்பர் கிளைவ் மடாண்டே சேர்க்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் சகலதுறை வீரர் டினோ முடோம்போட்ஸி தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.
அனுபவம் வாய்ந்த நடுவரிசை ஆட்டக்காரர்கள் சிக்கந்தர் ராசா மற்றும் வில்லியம்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிரெண்டன் டெய்லர் ஓய்வு பெற்ற பின்னர், அவர் இல்லாமல் சிம்பாவே களமிறங்குகிறது.
ஜனவரி 16, 18 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மூன்று ஆட்டங்கள் நடைபெறும்.
கடைசியாக இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 3-2 என சிம்பாவே கைப்பற்றியது.
இலங்கை மண்ணில் சிம்பாவே வென்ற ஒரே ஒரு நாள் தொடராக இது உள்ளது.
சிம்பாவே அணி இன்று இலங்கைக்கு புறப்படும்.