அரசாங்கம் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கெத்தாராம ஸ்ரீ சித்தார்த்த அறநெறி பாடசாலை கட்டிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார்.
நாட்டை அநாகரீக நிலைக்குத் தள்ளுவதற்கான குற்றச்சாட்டை முழு அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்பு இல்லை.
எரிவாயு கசிவுகள் மற்றும் திரவ உர வெடிப்புகள் இடம்பெறும் போது தேசிய பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனி, பால் மா, அரிசி மற்றும் எரிபொருள் போன்ற பொருட்களைப் பெற வரிசைகள் இருப்பதாகவும், குழந்தைகள் ஒன்லைனில் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
அண்மையில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், எரிபொருள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து வருவது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.