எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் இன்று பிற்பகல் கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.
நேற்றைய தினம் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1