கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தின் ஆற்றினை கடப்பதற்கு இலங்கை கடற்படையினரினால் இலவச படகு சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாளை (26) உத்தியோகபூர்வமாக எவ் கடற்படையின் படகுசேவை ஆரம்பமாகவுள்ளது.
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பலத்தின் நிர்மாணப்பணி நடைபெற்று வரும் நிலையில், ஆற்றினை கடப்பதற்கான படகுச்சேவையை நடத்த தனியார் ஒருவருக்கு கிண்ணியா நகரசபை அனுமதியளித்திருந்தது.
கட்டணம் செலுத்தி இதில் பயணிக்க முடிந்தது. எனினும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அவ் இழுவை படகு நேற்று முன்தினம் பாடசாலை மாணவர்கள் உட்பட பலருடன் பயணித்த நிலையில் விபத்திக்குள்ளாகி பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை கடற்படையின் படகு சேவை ஒன்று நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது
படகில் ஆகக்கூடிய தொகையாக 25 பேர் வரை பயணிக்கலாம். எனவும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பு அங்கிகள் அணிந்தே பயணிக்க வேண்டும்.
இன்றையதினம் இவ் படகு சேவையை திருகோணமலை கடற்படையினர் மேற்பார்வையிட்டனர். நாளை முதல் இவ் படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.