24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

விராட் கோலியின் 10 மாத மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த பொறியியலாளர் கைது!

இந்திய அணியின் கப்டன் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் 10 மாத பச்சிளங் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதரபாத் இளைஞர் கைது செய்யப்பட்டார்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டிலும், 2வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 8 விக்கெட்டிலும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர் முகமது ஷமியை சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக விமர்சித்தனர், அதைக் கண்டித்த கப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒருவர் கோலியின் 10மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த மிரட்டல் பெரும் வைரலாகி, விவாதப் பொருளானது, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன.

இதையடுத்து, மும்பை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினார். போலீஸார் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அகுபதினி ராம் நாகேஷ் எனத் தெரியவந்தது.

சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நாகேஷ் பணியாற்றி வந்துள்ளார். அவரை மும்பை போலீஸார் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர். மும்பை போலீஸாருக்கு உதவியாக இந்திராகரன் காவல்நிலைய அதிகாரிகளும் உடன் வந்தனர்.

போலீஸார் கூறுகையில், “கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்து கைது செய்தோம். அவர் மீது ஐபிசி பிரிவு 374(ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்

யார் இவர்?

ஹைதராபாத் ஐஐடியில் கடந்த 2019ம் ஆண்டு இளநிலை பொறியியல் படித்து முடித்த அகுபதினி அந்த ஆண்டே மிக உயர்ந்த ஊதியத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி கிடைத்தது. பெங்களூருவில் பணியாற்றி வந்த அகுபதினி, கரோனா தொற்று காரணமாக சொந்த ஊருக்கு வந்தார்.

குட்டள்ளி நாராயணா இன்டர்மீடியேட் கல்லூரியில் படித்த அகுபதினி 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்று ஹைதராபாத் ஐஐடியில் சேர்ந்தார். சாதாரண நடுத்தரக் குடும்பத்தை் சேர்ந்த அகுபதினியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மத்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதத் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் குடும்பம் சங்காரெட்டி மாவட்டத்தில் எட்டுமெய்லாராம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment