25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இந்தியா

எஸ்.பி.பி.க்கான பத்ம விபூஷண் விருதை பெற்றார் மகன் சரண்: சாலமன் பாப்பையா, பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார். பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருது விழா நடத்தப்படவில்லை. அந்த ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து 2021ஆம்ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர்மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். காலையில் பாதி பேருக்கும் மாலையில் மீதி பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன்எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் களை பாடியுள்ளார். கரோனா காரணமாக கடந்த 2020ஆம்ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.

மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2001இல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011இல் பத்ம பூஷண் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, இயற்கை விவசாயி பாப்பம்மாள், கூடைப்பந்து வீராங்கனை அனிதா,பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர். பின்னணி பாடகி சித்ரா, மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ராமகாஜனுக்கு பத்ம பூஷண், சிற்ப கலைஞர் சுதர்சன் சாஹோவுக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங் கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment