G20 தலைவர்கள், அனைத்து நாடுகளும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கக்கூடிய குறைந்தபட்ச வருமான வரிக்கு ஒப்புதல் அளிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பெரிய நிறுவனங்கள், வேறு நாடுகளில் ஈட்டிய லாபத்தைக் குறைவான நிறுவன வரி விதிக்கும் நாடுகளில் பதுக்குவதைத் தடுப்பது அதன் நோக்கம்.
G20 தலைவர்கள் மேற்கொள்ளவிருக்கும் அந்த நடவடிக்கையைப் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான அமைப்பு வரவேற்றுள்ளது.
வளர்ந்துவரும் நாடுகள், வைரஸ் தொற்றிற்குப் பிந்திய பொருளாதார மீட்சிக்கு நிதி திரட்ட அந்த மாற்றம் உதவும் என அது குறிப்பிட்டது.
அனைத்து நாடுகளும் பெரிய நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச வரி விதிப்பது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு சீர்திருத்தம் என அமைப்பின் தலைமைச் செயலாளர் மத்தாயஸ் கோர்மன் கூறினார்.
குறிப்பாக அது, வளர்ந்துவரும் நாடுகளுக்குக் கணிசமான பலன்களை அளிக்கும் என்றார் அவர்.