உலகின் முன்னணி சமூக ஊடகமான பேஸ்புக் அதன் பெயரை மாற்றத் திட்டமிடுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தொழில்நுட்பம் தொடர்பாகச் செய்திகளை வெளியிடும் The Verge அதுகுறித்துத் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது பேஸ்புக் நிறுவனம் metaverse என்னும் இணைய உலகத்தை உருவாக்குவதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
அதற்கு ஏற்ப நிறுவனத்தின் பெயரை மாற்ற எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய பெயர் குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் வரும் 28 ஆம் திகதி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர் மாற்றம் குறித்து பேஸ்புக் இதுவரை எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
பேஸ்புக் நிறுவனத்திற்குக்கீழ் Instagram, WhatsApp, Oculus போன்ற உலகின் முன்னணிச் செயலிகள் செயல்படுகின்றன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1