நடிகை நயன்தாரா கடை ஒன்றில் பேரம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கேரளாவைச் சேர்ந்த இவர், ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். தவிர ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகியப் படங்களும் நயன்தாராவின் கைவசம் உள்ளது.
இதில் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் காதலில் விழுந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பல இடங்களுக்குச் சென்று, அங்கு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
அதோடு இருவரும் ஜோடியாக பல ஆன்மிக தலங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.
Women Will Be Always Women 💃🙈 The Way She's Bargaining With The Seller 😍 Ayyoo So Cutiee 💓#LadySuperStar #Nayanthara @NayantharaU pic.twitter.com/4DsQmLQDDB
— NAYANTHARA FC KERALA (@NayantharaFCK) October 18, 2021
அப்போது ரோட்டோர கடையில் நயன்தாரா பேரம் பேசுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பேக் கடையில், குறைந்த விலைக்கு பேக்கை கொடுக்குமாறு, அவர் பேரம் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.