இன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஒரு தீர்க்கமான நாளாக இருக்கும் நம்புவதாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைமைச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க இதனை தெரிவித்தார்.
ஆசிரியர், அதிபர் ஊதிய முரண்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கவுள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெயசிங்க தெரிவித்தார்.
ஜூலை 12 ஆம் திகதி தொடங்கிய ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க போராட்டம் மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1