இவ்வருடம் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பது அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடத்திட்டங்கள் நிறைவுச் செய்யப்படாமல் இருப்பதால், மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கிடையிலான மேலதிக கலந்துரையாடல்களின் பின்னர் பரீட்சைகளின் புதிய திகதிகள் தொடர்பான இறுதி முடிவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களின்படி நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.