திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று மாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகர உள்வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரும், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
–க.கிஷாந்தன்-
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1