அவுஸ்திரேலியாவின் மெல்பொர்னில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.
விக்டோரியாவின் மான்ஸ்ஃபீல்டில் காலை 9.15 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அது மாநிலம் முழுவதும் உணரப்பட்டது.
லான்ஸ்டெஸ்டன், அடிலெய்ட், நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரை மற்றும் சிட்னி வரை நில நடுக்கம் உணரப்பட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.
ஜியோ சயின்ஸ் அவுஸ்திரேலியா சுமார் 18 நிமிடங்களுக்குப் பிறகு, மான்ஸ்பீல்ட் அருகே, நான்கு ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கத்தை அறிவித்தது.
இந்த நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்க பரபரப்புக்குள் அவுஸ்திரேலியாவில் வைரலாகி வரும் இன்னொரு விடயம்- கரோல் என்ற வெள்ளைப்பூனை.
வீடியோவின்படி, இன்று காலை மெல்பொர்னிலுள்ள வீட்டில் விளையாட்டு மீனுடன் கரோல் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது பூனையின் நடத்தையில் அசாதாரண நிலைமை தென்பட்டது.
விளையாட்டை நிறுத்தி விட்டு, திகைத்தபடி பூனை நிமிர்ந்து பார்க்கிறது. விளையாட்டை நிறுத்தி விட்டு பூனை சில அடிகள் நடந்து விட்டு, இயல்பற்ற நிலையில் மீனை தட்டிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. உடனடியாக பூனை அறை வாசலில் சென்று உட்கார்ந்து விட்டது.
Not a joke: the earthquake started as I was filming Carol playing with her new floppy fish toy. You can see her notice something’s happening here before I do. I am a dumb woman who thought for a sec *this toy was making the floor shake*. pic.twitter.com/Z3BTPEN0Pl
— Brodie Lancaster (@brodielancaster) September 21, 2021
ஏதாவது அபாயமென்றால் தப்பிச் செல்ல வசதியாக- விலங்குகளிற்குள்ள நுண்ணறிவின் அடிப்படையில் பூனை செயற்பட்டதாக அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.