27.5 C
Jaffna
December 22, 2024
Pagetamil
விளையாட்டு

இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் டுபாயில் இன்று தொடக்கம்: சிஎஸ்கே – மும்பை அணிகள் மோதல்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடர் டுபாயில் இன்று (19) தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது.

ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரின் 14வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தீவிரம்

சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேற்கொண்டு 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் சென்னைஅணி பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதேவேளையில் மும்பை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டிய நிலையில் மும்பை அணி உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment