ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து கர்ப்பமான யுவதி உயிரிழந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டம் கும்சி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் அஷ்வினி (20). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தந்தை கூலி தொழிலாளி என்பதால் குடும்பத்தின் முதல் பட்டதாரியான அஷ்வினி வேலை பார்த்து அனுப்பும் பணத்தால் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது.
இந்த நிலையில், அஷ்வினி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் பசவராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். அதே நேரம் கும்சி கிராமத்தைச் சேர்ந்த மதுசூதனன் என்று இளைஞரையும் நீண்ட நாட்களாக அஷ்வினி காதலித்து வந்துள்ளார். இந்த இரட்டை காதல் விவகாரம் இரண்டு இளைஞர்களுக்கும் தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆள் இல்லாத நேரத்தில் அஷ்வினியின் வீட்டுக்கு வெவ்வேறு நேரங்களில் வரும் இரண்டு வாலிபர்களும் அஷ்வினியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இப்படி பலமுறை அஷ்வினி இரண்டு காதலர்களுடனும் எல்லை மீறி உல்லாசமாக இருந்து வந்தார். இதன் காரணமாக அஷ்வினி கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் இரண்டு காதலர்களுக்கும் தெரிவித்த போது, கர்ப்பத்துக்கு நாங்கள் காரணமில்லை என்று இரண்டு வாலிபர்களும் கை விரித்துவிட்டனர். யாரால் கர்ப்பமானேன் என்று அஷ்வினி குழப்பமடைந்த சூழலில் சில மாதங்களில் அஷ்வினியின் உடலில் மாற்றம் ஏற்ப்பட தொடங்கியது.
இதுகுறித்து அஷ்வினியின் தாயார் மகளிடம் கேட்டபோது, அதிகம் சாப்பிட்டு வருவதால் தொப்பை வந்துவிட்டது என்று கூறி தாயிடம் சமாளித்துள்ளார். விஷயத்தை வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்று பயந்து அப்படியே நாட்களை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அஷ்வினிக்கு திடீர் வயிற்று வலி ஏற்படவே, தாய் அவரை ஷிமோகாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்ததில், அஷ்வினி 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு பேரதிர்ச்சி அடைந்த தாய் சம்பங்கி, என்ன நடந்தது என்று மகளிடம் கேட்டுள்ளார். அப்போது, இரட்டை காதலர்களின் விவகாரத்தை அஷ்வினி கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் அஷ்வினிக்கு பிரசவம் பார்த்ததில் குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. அடுத்து சில மணி நேரத்தில் அஷ்வினியும் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து ஷிமோகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லை மீறிய மகளின் வாழ்க்கை மரணத்தில் முடிந்ததுடன், இழப்பை தாங்கமுடியாமல் ஏழை பெற்றோர் பரிதவிக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.