ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தன் காதல் கணவருடன் சேர்த்து வைக்ககோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே அயத்தூர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்து வருபவர் தேவிதாஸ்.அதிமுக ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். வினோத் அதே பகுதியை சேர்ந்த மாலினி (21) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவரான தேவிதாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வினோத்தும் மாலினியும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.பின்னர் இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி நேரில் சென்று வினோத் மற்றும் மாலினி வீட்டாரிடம் விசாரணை நடத்தி கணவனின் தந்தை வீடான ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தங்க வைத்து சென்றார்.