Pagetamil
இந்தியா

நீட் தேர்வு எழுதி மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி – ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் கனிமொழி (17). பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி கனிமொழி, நீட் தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) எழுதியுள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகள் கனிமொழியை தந்தை தேற்றியுள்ளார். எனினும், மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவு (13) தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்றிருந்த கருணாநிதி மற்றும் ஜெயலட்சுமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கனிமொழி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி வழக்கறிஞராக உள்ளார். கனிமொழிக்கு உடன்பிறந்த சகோதரி கயல்விழி (19), பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment