கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோவிலில் இன்று காலை பொருட்கள் காளவாடப்பட்டுள்ளதாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் அமைந்துள்ள மாதா கோயிலிற்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். முன் கேற் பூட்டு உடைக்கப்பட்டு CCT கமராவிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கமரா முறிக்கப்பட்டு, ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் அருகில் அமைக்கப்பட்ட ஆலயப் பொருட்கள் வைக்கப்பட்ட சிறிய அறை உடைக்கப்பட்டு அதனுள் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.
அத்துடன், ஆலயத்தின் வெளியில் அமைக்கப்பட்ட களஞ்சிய அறையும் உடைக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட பொருட்களின் விபரம் முழுமையாக தெரியவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1