கொவிட் 19 கட்டுப்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் அடுத்த கூட்டத்தின் போது பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே சுகாதார துறை தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளது.
அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் இந்தக் குழுவைச் சந்திக்க உள்ளார்.
மேலும், பாடசாலைகள் திறப்பது தொடர்பாக பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
7 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை முதலில் திறக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை.
1, 2, 3 மற்றும் 4 வகுப்புகளை முதலில் திறக்க வேண்டும் என்ற மற்றொரு திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1