26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு உலருணவு வழங்க நிதியில்லை; கூட்டுறவு சங்கங்கள் கைவிரிப்பு: அரச அதிபர் விளக்கம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள கொவிட்19 தொற்றாளர்கள்
காரணமாக அதிகளவான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள. இவ்வாறு
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசினால் 10 உலருணவுப் பொதிகள்
வழங்கப்பட்டு வருகின்றனது.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் அவற்வை தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்திலுள்ள கூட்டுவுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை
தொடர்ச்சியாக வழங்குவதற்கு எமக்கு நிதி கிடைக்கவில்லை. ஆனால் உலருணவுப்
பொருட்களை வழங்குவதற்கான பட்டியல்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்று வருகின்றன.

மேலும் பொருட்களை வழங்குவதற்கான கூறுவிலை கோரல் எம்மிடம் பெறப்பட்ட போது
காணப்பட்ட பொருட்களில் விலைகளில் தற்போது இல்லை அனைத்து பொருட்களின்
விலைகளும் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில் நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம் எனக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவிய போது, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கா நிதியினை நாம்திறைசேரியிடம் கோரியுள்ளோம். எனவே நிதி கிடைத்ததும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment