சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் நேற்று (07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரஞ்சனா, முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் கிராமவாசிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1