26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இலங்கை

தென்னிலங்கையின் கனவான் அரசியல்வாதியான மங்கள சமரவீர!

நாட்டில் பல ஐனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கிய கிங்மேக்கர் மங்கள சமரவீர எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இனமத பேதமில்லாமல் அரசியற்திரு;விற்காக போராடிய கனவான் அரசியல்வாதி மங்கள சமரவீரவிற்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

அவரது அஞ்சலிக் குறிப்பில்,

தென்னிலங்கையில் கனவான் அரசியல்வாதியான மங்கள சமரவீர அவர்கள் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அல்ல என்று உறுதியாகக் கூறியவர். பல்லின பல்மத நாடு என்று உரத்துக் சொன்ன குரல் மங்களவின் குரல். அரசியற் தீர்விற்காக வெண்தாமரை இயக்கத்தை தீவிரமாகச் செயற்படுத்தியவர் மங்கள சமரவீர.

தெற்கில் தெய்வேந்திரமுனையில் பிறந்த மங்கள வடக்கில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை முனையிலுள்ள உலக சாதனை வீரன் ஆழிக்குமரன் நினைவு நீச்சல் தடாகத்தை ஆறு கோடி ரூபா செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தவர். இந்த நாட்டில் இனமத பேதங்களைக் கடந்து செயற்பட்டவர்.

மேலும் நாட்டில் பல ஐனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கிய கிங்மேக்கர் மங்கள சமரவீர. அன்றைய ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவின் ஆட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு போரில் பொது மக்கள் அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.

இதனால் கடந்த 2007 ஆம் ஆண்டு அரசு தரப்பில் இருந்து எதிர்க்கட்சித் தரப்பிற்கு வந்த பொழுது மங்கள சமரவீர மற்றும் சிறிபதி சூரியராச்சி ஆகியோரை பாராளுமன்றத்திற்குள் வைத்து அரச தரப்பினர் தாக்க முற்பட்ட போது மனிதக் கேடயங்களாக நின்று நாம் தடுத்து நிறுத்தினோம்.

அமரர் மங்கள சமரவீர அவர்களினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண தவறிவிட்டனர். மங்கள சமரவீர நாட்டின் ஐனாதிபதி பிரதமர் பதவிகளில் இருந்திருந்தால் இனப்பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய வாய்ப்புக்கள் பிரகாசமாக இருந்திருக்கும்.

இனமத பேதமற்ற அரசியல் தீர்விற்காக போராடிய அமரர் மங்கள சமரவீர அவர்கள் கொடிய கொரோனா அரக்கனினனால் கொல்லப்பட்டதற்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றுள்ளது

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயிலில் தவறவிடப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

east tamil

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

Leave a Comment