25.4 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

கல்லீரலை தானம் செய்து தம்பியின் உயிரை காப்பாற்றிய சகோதரிகள்

தம்பிக்காக அவரது சகோதரிகள் கல்லீரலை தானம் கொடுத்து, உயிரை காப்பாற்றியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் படாயு பகுதியை சேர்ந்த சிறுவன் அக்சத்துக்கு (14) மஞ்சள் காமாலையால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தம்பி மீது அதிக பாசம் வைத்திருக்கும் அவரது மூத்த சகோதரிகள் நேகா (29), பெர்னா (22) ஆகியோர் அவருக்கு கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தனர்.

டெல்லி அருகே குர்காவ்ன் நகரில் உள்ள மெதந்தா மருத் துவமனையில் சிறுவனுக்கு அண்மையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் நீலம் மோகன் கூறியதாவது:

கல்லீரல் பாதிப்பு மட்டுமன்றி, உடல் பருமனாலும் சிறுவன் அக்சத் அவதிப்பட்டு வந்தார். எனவே அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது கடினமாக இருந்தது. அறுவை சிகிச்சை அரங்கில் சிறுவன், அவரது 2 சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு கல்லீரல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மூவரும் தற்போது உடல்நலம் தேறி வருகின்றனர். இதுதான் சகோதரத்துவத்தைப் போற்றும் உண்மையான ரக் ஷா பந்தன் ஆகும்.

இவ்வாறு மருத்துவர் நீலம் மோகன் தெரிவித்தார்.

மெதந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ் கூறும்போது, “கல்லீரல் பாதிப்பால் அவதிப்படு வோருக்கு உறவினர்கள், நண்பர்கள் பாதி கல்லீரலை தானமாக வழங்கலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கிஉயிரை காப்பாற்றலாம்” என்று தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment