நியூஸிலந்தில் COVID-19 வைரஸ் தொற்று மேலும் மோசமடைந்துள்ளது. அங்குச் சமூக அளவில் புதிதாய் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
ஒக்லந்தில் 18 பேரும், வெலிங்டனில் 3 பேரும் புதிதாக தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நாடு முழுவதும் நடப்பில் உள்ள முடக்கநிலை நாளை மறுநாள்வரை நீடிக்கும்.
நியூஸிலந்துப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மேலும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும்படி அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1