கொரோனா தடுப்பூசி செலுத்த பணம் அறவிட்ட கொழும்பு மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானையிலுள்ள தடுப்பூசி மையமொன்றிற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்கு அவர் பணம் பெற்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்த ஒருவரிடமிருந்து 1,000 ரூபா பெற்றுள்ளார்.
கைதான 40 வயதான நபரிடம் 20,000 ரூபா பணம் இருந்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் எழுத்தர் ஒருவரே கைதாகியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1