கைதடி, நவபுரம் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இன்று ஆலய திருவிழா நடைபெற்றது.
நவபுரம் பகுதியிலுள்ள துர்க்கை அம்மன் கோயிலின் தீர்த்த திருவிழாவான இன்று, சுகாதார விதிமுறைகளை மீறி திருவிழா இடம்பெற்றது. அயலிலுள்ள இன்னொரு ஆலயத்திலிருந்து காவடியுடன் பக்தர்கள் வீதி வழியாக ஆலயத்திற்கு வந்து, திருவிழா இடம்பெற்றது.
ஆலய திருவிழாவை 50 இற்குட்பட்ட பக்தர்களுடன், ஆலய உள்வீதியில் மட்டும் சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்ட நிலையில், இன்று சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவான பக்தர்கள் குவிந்து திருவிழா இடம்பெற்றது. கலந்து கொண்டிருந்த பக்தர்களில் பலர் முகக்கவசமும் அணிந்திருக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று அபாயத்தில் பொதுமக்களின் பொறுப்பான நடவடிக்கையே சமூகத்தை பாதுகாக்கும்.