ஜப்பானில் நடைபெறும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை (8) நிறைவடைகிறது. இன்று இறுதி நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், டோக்கியோவில் உள்ள தேசிய ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் ஜூலை 23 அன்று ஆரம்பித்தது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் களமிறங்கினர்.
ஒன்பது இலங்கையர்கள் இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். எனினும், யாரும் அதில் ஜொலிக்கவில்லை.
ஜப்பானில் 14 நாள் போட்டிகளுக்குப் பிறகு பதக்க அட்டவணையில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சீனா 38 தங்கம், 30 வெள்ளி மற்றும் 18 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 86 பதக்கங்களை வென்றுள்ளது.
தரவரிசையில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. டோக்கியோ விளையாட்டுகளில் 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற ஒரே நாடு அதுவாகும்.
34 தங்கப் பதக்கங்கள், 37 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் உட்பட 103 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் 25 தங்கம், 12 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 56 பதக்கங்களை வென்றுள்ளது.
பெரிய பிரித்தானியா 20 தங்கப் பதக்கங்களையும், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 19 தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளன.
டோக்கியோவில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து தலா 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில் அவுஸ்திரேலியா 17 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
மொத்தம் 91 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையேனும் வென்றுள்ளன.