அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த 16 வயதான சிறுமி இசாலினியின் உடல் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, பேராதனை போதனா மருத்துவமனை பிணவறையில் இன்று நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மூத்த டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவப் பீட தடயவியல் மருத்துவப் பேராசிரியர் கலாநிதி ஜீன் பெரேரா, மூத்த விரிவுரையாளர் வைத்தியர் சமீர குணவர்தன மற்றும் பேராதனை போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் பிரபாத் சேரசிங்க ஆகியோர் பிரேத பரிசோதனையை நடத்தியதாக அவர் கூறினார்.
இன்று (31) காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை 9 மணிநேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியின் உடல் சிடி ஸ்கான் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
சிறுமியின் உடலின் உட்புற காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளைக் கண்டறிய சிடி ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.