மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, இடமாற்ற கட்டளை பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை விடுவிப்பு செய்ய மறுத்து வருவதனால் இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்படாமல் இருந்து வரும் குறித்த உத்தியோகத்தர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை எதிர்வரும் நாட்களில் நேரடியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1