தென்பகுதியில் இருந்து வடக்கிற்குள் நுழைந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்பகுதியில் இரவு வேளைகளில் வடக்கிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை 300 இற்கு மேற்பட்டவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர். அதன் முடிவுகள் இன்று (30.07) வெளியாகிய நிலையில் 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தேக்கவத்தைப் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பகுதியில் ஒருவருக்கும், கூமாங்குளம் பகுதியில் இருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், யாழ் அரியாலை பகுதியில் இருவருக்கும், களுத்துறை பகுதியிசைச் சேர்ந்த ஒவருக்கும், யாழ் வேலணை 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ் கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சி பளையைச் சேர்ந்த ஒருவருக்கும், முல்லைத்தீவு வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கும், கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், மிகிந்தலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், யாழ் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்மூலம், தென்பகுதியில் இருந்து வடக்கிற்கு பிரவேசிப்பவர்கள் ஊடாக கோவிட் பரவல் அடைந்து பவருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.