பற்களில் நிற மாற்றம் ஏற்படுவதற்கான முக்கிய இரண்டு காரணங்கள் எனாமல் மெலிதல் மற்றும் கறை படிதல் ஆகும். நமது பற்களின் வெளிப்புற அடுக்கை நாம் எனாமல் என்று அழைக்கிறோம். பொதுவாக அமில உணவுகள் மற்றும் ஈறு பிரச்சினைகள் எனாமல் அரிப்பிற்கு வழிவகுக்கிறது. சிலருக்கு பிறக்கும் போதே பற்களில் ஏற்படும் நிற பிரச்சனைள் உள்ளன. நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காபி, தேநீர் மற்றும் ஒயின் போன்ற உணவு நமது பற்களில் கறை ஏற்பட காரணமாகின்றன. பற்களில் மஞ்சள் கறை படியக் வழிவகுக்கிறது.
எண்ணெயில் வாய் கொப்பளித்தல் என்பது ஒரு பழமையான சுகாதார பழக்க வழக்கமாகும் .
இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இந்த முறை நமது வாய் வழியாக உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு நீங்கள் எள் எண்ணை அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி உங்கள் வாயை நன்றாக கொப்பளிக்கவும். அதன்பிறகு மவுத் வாஷ் கொண்டு உங்களது வாயை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
இந்த பேக்கிங் சோடா தற்போது தயாரிக்கப்படும் அதிகமான பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பற்களை வெண்மையாக்க உதவுகிறது. மேலும் பல்களில் உள்ள கறைகளை நீக்கவும் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை, இரண்டு டீ ஸ்பூன் தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது அதிகமாக பயன்படுத்தப்படும் போது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.