ரேட் கேட்கிறார்கள்: உள்ளாடை புகைப்படத்தை வெளியிட்ட பிரபலத்தின் மகள் வேதனை!

Date:

பிரபல பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பின் மகள் ஆலியா, தான் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலர் தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாக ஆலியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆலியா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,

கடந்த சில வாரங்களாக எனக்கு மனதளவில் கஷ்டமாக இருக்கிறது. நான் லாஞ்சரி(lingerie)அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டதில் இருந்து படுகேவலமான கமெண்ட்டுகள் வருகின்றது. நான் இதுவரை இந்த அளவுக்கு பயந்ததே இல்லை. இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிவிடலாமா என்று கூட யோசித்தேன்.

என்னை அசிங்கப்படுத்துபவர்களை கண்டுகொள்ளாமல் இருக்க முயன்றேன். ஆனால் இது குறித்து கண்டிப்பாக பேச வேண்டும். ஏனெனில் இது போன்ற மோசமான கமெண்ட்டுகள் தான் பலாத்கார கலாச்சாரத்திற்கு வழிவகை செய்கிறது. அது இந்தியாவில் இருக்கும் அனைத்து பெண்களையும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் செல்லும் மக்கள் தான் உயிருடன் இருக்கும் பெண்ணை பாதுகாப்பது இல்லை. பல பெண்களுடன் சேர்ந்து என்னை துன்புறுத்துபவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். அவர்கள் தான் பலாத்கார கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள் என்றார்.

தன்னை பற்றி வந்த மோசமான கமெண்ட்டுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதையும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் ஆலியா.

முன்னதாக தன் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஆலியா.

அதில் அவர் கூறியிருந்ததாவது,

நான் ரொம்ப சென்சிட்டிவ். யாராவது ஏதாவது சொன்னால் அது என்னை பெரிய அளவில் பாதிக்கும். இப்படி சொல்லிவிட்டார்களே என அழுவேன். ஒரு இந்திய பெண்ணாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட புகைப்படத்தை வெளியிட நான் வெட்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

எனக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை விலைமாது என்கிறார்கள். என் ரேட் என்னவென்று கேட்கிறார்கள். கொலை மிரட்டல் விடுப்பதுடன் என் குடும்பத்தை பற்றி தவறாக பேசுகிறார்கள் என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்