சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக வெற்றிநடைப்போட்டு, தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் இடத்தை பிடித்து வந்த விகடன் ஒளித்திரை படைப்புகளான ‘தெய்வ மகள்’ மற்றும் ‘நாயகி’ தொடர்களை மறு ஒளிபரப்பு செய்ய கலைஞர் தொலைக்காட்சி முடிவெடுத்துள்ளது.
கிருஷ்ணா, வாணி போஜன் நடித்த ‘தெய்வ மகள்’ சிறந்த நெடுந்தொடருக்கான தமிழக அரசின் விருது, விகடன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சீரியல் என்பது நினைவிருக்கலாம். அதிலும் இந்தத் தொடரில் வரும் ‘அண்ணியார்’ கதாபாத்திரத்தின் வீச்செல்லாம் வேற லெவல் என்றே சொல்லலாம். சிறந்த எதிர்மறைக் கதாபாத்திரம், சிறந்த ஒளிப்பதிவு ஆகியவற்றிற்காகவும் விருதுகளை வாங்கிக் குவித்த ‘தெய்வ மகள்’ மார்ச் முதல் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
அதேபோல் திலீப்ராயன், விஜயலட்சுமி, வித்யா பிரதீப் நடிப்பில் குடும்பங்கள் கொண்டாடிய ’நாயகி’ தொடர் மார்ச் முதல் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.