26.3 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

வவுனியாவில் 30 பேருக்கு தொற்று!

வவுனியாவில் 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று (30) இரவு வெளியாகின.

அதில், தவசிகுளம் பகுதியில் பத்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் இருவருக்கும், பெரியார்குளம் பகுதியில் இருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூவருக்கும், கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிதம்பரம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் இருவருக்கும், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், அலகல்ல பகுதியில் ஒருவருக்கும், பெரியஉளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பொலிசார் இருவருக்கும் என 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment